திலீபனுடன் 12 நாட்கள் - My view
இன்று மு. வே. யோ. வாஞ்சிநாதன் என்பவரால் எழுதப்பட்ட திலீபனுடன் 12 நாட்கள் புத்தகம் படித்தேன். புத்தகத்தின் முடிவு முன்னமே தெரிந்தாலும், ஒவ்வொரு பக்கத்தை திருப்பும் பொழுதும் மனம் பதற்றத்தை, வலியை கூட்டிக்கொண்டெ சென்றது. எப்படி ஒரு 23 வயது இளைஞனுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கமுடியும். சாகும்வரை நீரும் உணவுமற்ற உண்ணாவிரதம். நினைக்கும் பொழுதே ஆச்சிரியமான ஒரு எண்ணம்.
இந்த நிகழ்வு நடந்து 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சிங்கள இராணுவ தளபதி சொன்னார், விடுதலை புலிகள், உடல்நிலை சரி இல்லாத திலீபனை வைத்து அனுதாபத்தை தேடவே உண்ணாவிரத நாடகத்தை அறங்கேற்றினார்களென்று. அவர் சொல்வது உண்மையாகவே இருப்பினும், கொண்ட கருத்தில், உளம் மாறாமல், இன்னுயிரை ஈந்த திலீபன் அவற்களை, என்னால் பகத்சிங் அவர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பகத்சிங்கும் 23 வயதில் பிரிட்டிஸ் ஏகாதிப்பத்தியத்திற்க்கு எதிராக போராடி உயிர்விட்டவர். அவரது உயிரை காந்தி நினைத்திருந்தால் காப்பற்றியிருக்க முடியுமென்று ஒரு கருத்து பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. அதுபோல், திலீபனுடைய உயிரும் காந்தி தேசம் நினைத்திருந்தால் காப்பற்றப்பட்டிருக்கும்.
இந்த உலகம் பல போராளிகளை கண்டுள்ளது. ஆனால், அவர்களுள், மக்கள் மனதில் நின்று வாழ்பவர்கள் சிலரே. இன்று அவ்வாரான ஒருவரை, அதிலும், என் தாய்மொழி பேசிய ஒரு வீர தமிழரை பற்றி அறிந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன். சமீபத்தில் ஒரு இலங்கை தமிழர், இந்தியா காந்தியை எப்படி மதிக்கிறதோ, அதுபோல் நாங்கள் திலீபனை மதிக்கிறோமென்று ஒரு பேட்டியில் சொல்லக்கேட்டேன். 78 ஆண்டுக்காலம் காந்தி வாழ்ந்து சேர்த்த பெயரை, 23 வயது இளைஞர் தன் மனஉறுதியால், மரணத்தை தழுவி பெற்றிருக்கிறார். இது நிச்சயம் நாம் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டிய ஒரு பாடம். கொண்ட கொள்கையில் உறுதியோடிருக்க தியாக தீபம் திலீபனிடத்தில் நாம் அனைவரும் பாடம் கற்ப்போமாக!
Comments
Post a Comment