நீதி பாதியும், பாதி நீதியும் - My view
நீதிபதி திரு. சந்துரு அவர்கள் எழுதிய நீதி பாதியும், பாதி நீதியும் புத்தகத்தை நேற்று படித்தேன். அவருடைய பனி ஓய்விற்கு பிறகு அவர்இந்து தமிழ்திசையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த புத்தகம் மிகவும் நேர்த்தியாக தொகுக்க பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கு பின்னும் அது பிரசுரிக்க பட்ட நாள் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர் ஏன் அந்த கட்டுரையை அந்த நேரத்தில் அந்த கட்டுரைகளை எழுதினார் என்பதை உள்ளங்கை விளக்காககாட்டுகிறது. அவர் தனது மார்க்சிய சித்தாந்த சார்பை ஒரு போதும் மறைத்து இல்லை. அது புத்தகத்தின் வழி நெடுகிலும் காணக்கிடைக்கிறது. தனது கருத்துக்களை மிக தெளிவாக தக்க சான்றுகளுடன் ஒரு நீதிபதிக்கே உண்டான தேர்ச்சியுடன் அவர் எழுதியிருக்கிறார்.
நீட்(NEET) தேர்வு விளக்கு எப்பொழுதும் ஏன் சாத்தியப்படாது. நம் கல்விமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் வரலாறு ஆகியவை மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது. நீதிதுறை, சட்டமன்றம்(நாடாளுமன்றம்), அரசு இவை மூன்றும் எப்படி தனித்து செயல்பட வேண்டும், அதே நேரத்தில் மக்களின் வாழ்வை செழுமையாக்கும் குறிக்கோளில் எப்படி இயைந்து செயல்படவேண்டும் என்பதை இதை விட தெளிவாக யாரும் கூறிவிட முடியாது.
நீதிபதிகளின் பொறுப்பு, அவர்கள் காக்க வேண்டிய கண்ணியம். வழக்கறிஞரிகளுக்கு உண்டான பொறுப்பு, அவர்கள் ஏன் தொடர்ச்சியாக சட்ட புத்தகங்களை படிக்க வேண்டும் போன்ற விளக்கங்கள் அருமை.
என் போன்ற இளம் வாசகர்களுக்கு, தோழர் திரு வி. பி.சிந்தனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.
அவர் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களது 60 ஆண்டுகால சட்டமன்ற நிறைவை குறிக்கும் வகையில் எழுதிய கட்டுரை இந்த புத்தகத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒன்றாக துருத்தி கொண்டிருப்பதை தவிர்த்து இருக்கலாம். இது சில இடங்களில் அவரை திமுக அனுதாபியென என்னும் வண்ணம் உள்ளது. உலகமயமாக்கல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றை பற்றிய அவருடைய பார்வையில் எனக்கு முழு ஏற்பு இல்லை.
தொழிலில் நேர்மை, சிந்தனையில் தெளிவு, உண்மையை உரக்க சொல்வது போன்ற அவரது நிலைப்பாடுகளில் அவர் என்னை ஈர்த்துவிட்டார். நெடுநாட்களுக்கு பிறகு ஒரு நல்ல
தொழிலில் நேர்மை, சிந்தனையில் தெளிவு, உண்மையை உரக்க சொல்வது போன்ற அவரது நிலைப்பாடுகளில் அவர் என்னை ஈர்த்துவிட்டார். நெடுநாட்களுக்கு பிறகு ஒரு நல்லபுனை கதை அல்லாத புத்தகத்தை படிக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. நீதிபதி திரு. சந்துரு அவர்களின் எழுத்துப்பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment